Monday 1 October 2012

திருவூரில் வாழும்சிவம்


அருட்பெருஞ்ஜோதி                         ஒம் நமசிவாய                    அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                    சிவாய நம ஓம்                    அருட்பெருஞ்ஜோதி

அருள்மிகு  ஸ்ரீ சிங்காண்டீஸ்வரர்  உடனுறை   ஸ்ரீ   உத்பலாம்பாள் திருக்கோயில்
                    திருவூர்  திருவள்ளூர்  - 602025

அமைந்துள்ள இடம் திருவள்ளூர் மாவட்டம்   - திருவூர் கிராமம்
திருகோயிலுக்கு  வரும் வழி  

சென்னையிலிருந்து:-  40 கி மீ .

Ø  செவ்வாப்பேட்டை ரோடு  ரயில்வே ஸ்டேசன்  வழியாக  1.5 கி மீ .
Ø  அரண்வாயல் பேருந்து நிறுத்தம்  வழியாக  0.5 கி மீ .

 திருவள்ளூரிலிருந்து:- 6 கி மீ .

    Ø  செவ்வாப்பேட்டை ரோடு  ரயில்வே ஸ்டேசன்  வழியாக  1.5 கி மீ .
    Ø  அரண்வாயல் பேருந்து நிறுத்தம் இறங்கி பாலம்  வழியாக 0.5 கி மீ.

திருகோயில் கட்டப்பட்ட ஆண்டு  கீ பீ 1261 .  


  • திருகோயிலை  கற்கோயிலாக  கட்டிய மன்னன்  முதலாம் ஜடாவர்ம  சுந்தரபாண்டியன் ஆட்சி காலத்தில் மலையான்  திருவண்ணாமலை உடையான் என்பவரால் கட்டப்பட்டது.
  • பாண்டியர்கள் ஆட்சி காலத்திற்கு பின்னர், சோழமன்னரான விஜய கண்ட கோபாலனின் ஆட்சி காலத்தில் இக்கோயில் கணக்குகள் பிச்சண்டவனான வல்லவரையான் என்பவனால் சீர் செய்யப்பட்டது.
  •   கி பி 1502  ம் ஆண்டில் விஜய நகர அரசர்  சாளுவ வம்சத்தினை சார்ந்த திம்மைய தேவரின் பராமரிப்பில் இருந்தது .
  •   கி பி 1519 ல்  கிருஷ்ண தேவராயரின்  பிரதானியாக இம்மடி திருமலை  நாயக்கரும் தன் பங்கிற்கு  திருப்பனியாற்றினார்.
  •   கி பி 1527 ல்  கிருஷ்ண  தேவராயர் காலத்தில்  தமிழ்  நிகண்டினை தொகுத்தவர்  மகாமண்டல புருஷர் மற்றும்  இம்மடி திருமலை நாயக்கரின் பிரதானியாக  இருந்த  சதாசிவநாயக்கரின் திருப்பணிகள்  தொடர்ந்து நடைபெற்றது.

ஆரம்பகாலத்தின்  திருக்கோயிலின் பெயர்   ஊர் பெயர்  திருகூர் என வழங்கப்பட்ட திருவூர்.  
திருகோயில்  அமைந்த  இடம் சிங்கீஸ்வரம்  என வழங்கப்பட்டது

இறைவன் பெயர் -   ரிஷ்யசிங்கீசுவரர்

ஆலயத்திற்க்குள்  அமைந்துள்ள சந்நிதிகள்
·         அருள்மிகு  ஸ்ரீ சிங்காண்டீஸ்வரர் சந்நிதி.
·         அருள்மிகு ஸ்ரீ   உத்பலாம்பாள் சந்நிதி.
·         அருள்மிகு ஸ்ரீ அத்திமுகவிநாயகர் சந்நிதி.
·         அருள்மிகு ஸ்ரீ வள்ளி  தெய்வானை  சமேத  வள்ளல் குமரன்   சந்நிதி.
·         அருள்மிகு   அருட்பெருஞ்ஜோதி ஜோதியுடன்  வள்ளலார் சந்நிதி.
·         அருள்மிகு ஸ்ரீ சண்டீஸ்வரர்   சந்நிதி.

பரிவார தெய்வங்கள்  
·         அருள்மிகு ஸ்ரீ விநாயகர் நின்றகோலம்.  
·         அருள்மிகு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி.  
·         அருள்மிகு ஸ்ரீ லிங்கோத்பவர்.  
·         அருள்மிகு ஸ்ரீ பிரம்மா.  
·         அருள்மிகு ஸ்ரீ துர்க்கை.  

மாடக்கோயில்கள்
·     தேவாரம் பாடிய நால்வர், 63  நாயன்மார்களைப்  பெரிய புராணம் மூலம் தொகுத்து வழங்கிய  சேக்கிழார். 
·         அருள்மிகு ஸ்ரீ நாகராஜர்.   
·         அருள்மிகு ஸ்ரீ சப்தகண்ணிகள்.
·         அருள்மிகு ஸ்ரீ சிங்காரபைரவர். 
·         அருள்மிகு ஸ்ரீ சூரியன். 
·         அருள்மிகு ஸ்ரீ சந்திரன்.

ஸ்தல  விருட்சம்     -    வில்வம்

திருகோயிலுக்குள்  வெளிப்பிரகாரத்தில்  வில்வமரங்கள், தென்னை மரங்கள், வாழைமரங்கள், பலாமரம் , மகுடம்பூமரம், பவளமல்லி மரம்,  கொக்கு மந்தாணர மரம், மஞ்சள்பூ  செடி.

நடைபெறும் முக்கிய  விழாக்கள்  
                               
அருள்மிகு  சிங்காண்டீஸ்வரர் உத்பலாம்பாள் , அருள்மிகு ஸ்ரீ வள்ளி  தெய்வானை  சமேத  வள்ளல் குமரன்  , அருள்மிகு  நந்தீஸ்வரர்  சுயசாம்பிகை திருமணங்கள், பங்குணி  உத்திரப் பெருவிழா.

v  ஸ்ரீ மகா சிவராத்திரி பெருவிழா.                         
v  மகா  கந்தசஷ்டி பெருவிழா  ,  சூரசம்ஹாரம் ,  தெய்வத்திருமணம்.
v  தைப்பூசத்தையொட்டி வள்ளலார் கண்ட  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  கோயில் அன்னதானம்.
  
மாத வழிபாடு           
v  பிரதோஷ வழிபாடு, அன்னதானம் – மாதம் இருமுறை மாலை 4 மணிமுதல் 6 மணிவரை.
vசங்கடகரசதுர்த்தி. மாலை 4 மணிமுதல்.   
v  அமாவாசை. காலை 9 மணி.
v  பௌர்னமி.  காலை 9  மணி.
v  மாதசிவராத்திரி அருட்பாரயனம் மாலை 7 மணி

வார வழிபாடு
v  செவ்வாய்  கிழமை  -   ஸ்ரீ துர்க்கை  மாலை 6:30 மணி.
v  வியாழன் கிழமை - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி   மாலை 6:30 மணி.
v  சனிக் கிழமை  -   அருட்ஜோதி  சபையின்  தேவாரம் திருவருட்பா பாடல்கள் வழிபாடு மாலை 6 மணி.
v  தினந்தோறும்  மாலை 7  மணிக்கு  ஜோதி  ஆராதனை.

திருக்கோயிலின் சிறப்பு அமைப்பு:-  

இராஜகோபுர நுழைவாயிலுக்குள் மேலே அமைந்துள்ள அஷ்டதிக் பாலகர்கள், இராட்சதமீன், இராட்சபல்லிகள் அமைப்பு.

இத் திருக்கோயிலை கற்கோயிலாக மாற்றுவதற்கு முன்னர் ரிஷ்யசிங்கீசுவரர்
எனும் மாமுனிவர் பிரதிஷ்டை செய்து வணங்கிய சிவலிங்கம். 

நிறைவேறும் கோரிக்கைகள்.

 vபிரதோஷ காலத்தில் கலசம் எடுத்து வேண்டுவோருக்கு திருமண பாக்கியம், மகப்பேறு பாக்கியம் மற்றும் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.

 vகுரு ஸ்தலமான இத்திருகோயில்  குருப்பெயர்ச்சி  காலங்களில் நடைபெறும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி   அபிஷேக ஆராதனை அனைத்து ராசியினருக்கும் நல்ல பலனைத் தரும்.

இத்திருகோயில் புகழை புலியூர் சிவராஜா சுவாமிகள் இந்த பாடல் வரிகளில் மிக அருமையாக கூறுகின்றனர்

அங்கந்திகழ அணியாய் அலராரூந்தளிற்  கழலாய்
திங்கள் திகழ் சடையாய்  திருவிடையாய் பணிஉடையாய்
எங்கந் திகழ் சிங்காண்டி  யென் இடர்தீர்த்து  அருளடியார்
சங்ந்திகழ் திருவூரில் தயவோடு அமர்சிவமே. 

பொன்பூத்த நின்கோயில் அனுதினம் சூழ்பவர்
புவிமீது கரி ஏறுவார்
புனிதமிகு தவயோகியும் காண்பதற்கு அரிய
பொன் தாமரைக் கழல்களை
அன்பூத்தொடுக்கவே அழுதழுது தொழுபவர்
அரசர்க்கும் அரசராவர்.

அன்பே சிவமென்று ஆன்றோர் உரைத்தமொழி
பன்பே மாறாமல் பாரினில் வந்தசிவம்
கண்ணார தரிசித்தால் இன்னல்கள் தீருமென
முன்னோர் சொன்னபடி திருவூரில் வாழும்சிவம்.

1998ம் ஆண்டு தொடங்கிய திருப்பணி முலம் மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளும்
கட்டிடம் பணிகளும் சிறப்பாக நடைபெற்றுவருகிறதுஎஞ்சியுள்ள திருப்பணிகள்  இராஜகோபுர முதல் நிலைவரை சீரனமக்கும் பணியும் திருக்குளம் சீர்செய்யும்
பணி இப்பணிகளுக்கு நிதியுதவி செய்வோர்

செயலாளர்,
சிங்காண்டீஸ்வரர் திருக்கோவில்,
திருவூர்.

என்ற முகவரிக்கு காசோலையாகவோ அல்லது டிமான்ட் டிராப்ட் மூலமாகவோ  செலுத்துமாறு வேண்டப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க.

திரு சௌந்தர்ராஜன்                           திரு இராம விமலன்.
9952414369                                     9382664946

http://www.flickr.com/photos/rajushanthi/sets/72157630156067894/